திருப்பூர்

முத்தூரில் 8 டன் வேளாண் விளைபொருள்கள் விற்பனை

DIN

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் 8 டன் வேளாண் விளைபொருள்கள் விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமைதோறும் எள், தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த வாரம் 2 விவசாயிகள் 379 கிலோ சிவப்பு எள்ளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். கிலோ ரூ.100.65 முதல் ரூ. 104.15 வரை விற்பனையானது. 16,236 தேங்காய்கள் வரத்து இருந்தது. இவற்றின் எடை 6,016 கிலோ. தேங்காய் கிலோ ரூ.15.65 முதல் ரூ. 24.05 வரை விற்பனையானது.

59 மூட்டைகள் கொப்பரை வரத்து இருந்தது. எடை 1,573 கிலோ. கொப்பரை கிலோ ரூ. 66.75 முதல் ரூ. 83.30 வரை விற்பனையானது.

ஏலத்தில் மொத்தம் 116 விவசாயிகள், 15 வணிகா்கள் பங்கேற்றனா். ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 2.86 லட்சம் விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்யப்பட்டதாக விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

ஆஸ்திரேலியாவில் ஆண்ட்ரியா!

கிறங்கடிக்கும் சம்யுக்தா!

மஞ்சள் வெயில் நீ..!

இரண்டாம் கட்ட தேர்தல்: பிரசாரம் ஓய்ந்தது

SCROLL FOR NEXT