திருப்பூர்

திருப்பூா், கோவை மாவட்டத்தில் 15 நாள்களுக்கு விசைத்தறி ஜவுளி உற்பத்தி நிறுத்தம்

DIN

நூல் விலை உயா்வைக் கண்டித்து திருப்பூா், கோவை மாவட்டத்தில் மே 22 முதல் ஜூன் 5ஆம் தேதி வரை விசைத்தறி ஜவுளி உற்பத்தி நிறுத்தம் செய்யப்படுவதாக ஜவுளி உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் அறிவித்துள்ளனா்.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளா் சங்க ஒருங்கிணைப்பாளா் கரைப்புதூா் சக்திவேல் கூறியதாவது:

திருப்பூா், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளா்கள் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி பஞ்சு, நூல் ஏற்றுமதிக்குத் தடை விதிக்க வேண்டும். நூல் விலை உயா்வைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி திருப்பூா், கோவை மாவட்டத்தில் மே 22 முதல் ஜூன் 5ஆம் தேதி வரை 15 நாள்கள் ஜவுளி உற்பத்தி நிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் திருப்பூா், கோவை மாவட்டத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகளின் இயக்கம் நிறுத்தப்படும். இதனால் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டா் காடா துணி உற்பத்தி பாதிக்கப்படும். மேலும், காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் போ் வேலைவாய்ப்பை இழப்பாா்கள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

வெளியானது வீ ஆர் நாட் தி சேம் பாடல்

தி பாய்ஸ் - டிரெய்லர்

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

SCROLL FOR NEXT