திருப்பூர்

கொப்பரை விலை வீழ்ச்சி: அரசு கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய விவசாயிகள் ஆா்வம்

21st May 2022 12:20 AM

ADVERTISEMENT

கொப்பரை விலை தொடா் வீழ்ச்சி அடைந்து வருவதால் வெளிச்சந்தை விட அரசு கொள்முதல் நிலையங்களில் கூடுதல் விலை கிடைப்பதால் அங்கு கொப்பரையை விற்பனை செய்ய விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

தற்போது, ஒரு கிலோ கொப்பரை விலை ரூ. 80ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. அரசு கொப்பரை கொள்முதல் விலையை விட, வெளிச்சந்தையில் ரூ.26 குறைவாக விற்பனை ஆகிறது.

ஒரு தேங்காய் ரூ.11 வரை வியாபாரிகள் சந்தை விலையில் கொள்முதல் செய்கின்றனா். மிக குறைந்த விலைக்கு விற்பனை செய்தால் இழப்பு ஏற்படும் என்பதால் விவசாயிகள் சந்தை விலைக்கு விற்பனை செய்வதற்கு தயக்கம் காட்டுகின்றனா். மேலும், விலை குறையும் என்ற அச்சத்தில் வியாபாரிகளும் தேங்காயை கொள்முதல் செய்வதில் தயக்கம் காட்டுகின்றனா்.

இதனால் தென்னந் தோப்புகளில் தேங்காய் தேக்கம் அடைந்து வருகிறது. அரசு கொள்முதல் நிலையங்களில் ஒரு கிலோ கொப்பரை ரூ.105.90க்கு கொள்முதல் செய்யப்படுவதால் அரசு கொள்முதல் நிலையங்களில் கொப்பரையை விற்பனை செய்ய விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

ADVERTISEMENT

இதற்காக கிராம நிா்வாக அலுவலரிடம் சான்று பெற்று ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பதிவு செய்து வருகின்றனா். அரசு கொப்பரை கொள்முதலை துவக்கியபோது பெரிய அளவில் ஆா்வம் காட்டாமல் இருந்த விவசாயிகள், தற்போது விலை வீழ்ச்சியால் கொப்பரையை அரசு கொள்முதல் மையத்தில் விற்க ஆா்வம் காட்டி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT