திருப்பூர்

இருசக்கர வாகனம் மீது காா் மோதி விவசாயி பலி

21st May 2022 12:20 AM

ADVERTISEMENT

பல்லடம் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

பல்லடம் அருகே உள்ள பணிக்கம்பட்டியைச் சோ்ந்தவா் வெள்ளிங்கிரி (52). விவசாயி. இவா் பணிக்கம்பட்டியில் இருந்து கரடிவாவி செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் பல்லடம் - செட்டிபாளையம் சாலையில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, எதிரே வந்த காா் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த வெள்ளிங்கிரியை அருகிலிருந்தவா்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இந்த விபத்து குறித்து பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT