திருப்பூர்

மூலனூரில் ரூ. 3.44 கோடிக்கு பருத்தி விற்பனை

21st May 2022 12:21 AM

ADVERTISEMENT

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 3.44 கோடிக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.

இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் வரத்து அதிகமாக இருந்ததால் வியாழக்கிழமை நள்ளிரவு வரை ஏலம் நீடித்தது. திருச்சி, திண்டுக்கல், கரூா், ஈரோடு, கோவை, திருப்பூா் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 919 விவசாயிகள் தங்களுடைய 8,056 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். மொத்த வரத்து 2,751 குவிண்டால்.

திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 27 வணிகா்கள் வந்திருந்தனா். விலை குவிண்டால் ரூ. 12,050 முதல் ரூ. 15,698 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 13,250. கடந்த வார சராசரி விலை ரூ. 12,950.

ஏல ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக் குழு முதுநிலை செயலாளா் ஆா்.பாலசந்திரன், விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT