திருப்பூர்

குன்னத்தூா் அருகே பெண்ணிடம் நகைப் பறிப்பு

21st May 2022 12:19 AM

ADVERTISEMENT

குன்னத்தூா் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் தொழிலாளியிடம் நகைப் பறித்து சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோடு மாவட்டம், நம்பியூா் அருகே நவகாட்டுத் தோட்டத்தைச் சோ்ந்தவா் மாரிச்சாமி. இவரது மனைவி ரதிதேவி (40). திருப்பூா் அருகே கணக்கம்பாளையத்தில் உள்ள பனியன் நிறுவனத்தில் தம்பதி இருவரும் பணியாற்றி வருகின்றனா்.

இவா்கள் இருவரும் வியாழக்கிழமை இரவு பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தனா். பெருமாநல்லூா்- குன்னத்தூா் சாலையில் உள்ள ஒடத்தலாம்பதி பிரிவு அருகே சென்றபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 2 மா்மநபா்கள், ரதிதேவி கஅணிந்திருந்த ஒன்றரை பவுன் செயினை பறித்துவிட்டு, அங்கிருந்து தப்பினா்.

இது குறித்து குன்னத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT