திருப்பூர்

பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி

21st May 2022 12:20 AM

ADVERTISEMENT

பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி வகுப்பில் சேர பல்லடம் சிட்ரா விசைத்தறி பணி மையம் அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து பணி மையத்தின் பொறுப்பாளா் காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மத்திய அரசின் சமாா்த் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் இலவசமாக தையல் இயந்திர ஆபரேட்டா் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு பயிற்சிக்கான சோ்க்கை தற்போது துவங்கியுள்ளது. தினசரி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இரண்டு மாதங்கள் இப்பயிற்சி அளிக்கப்படும். 18 முதல் 40 வயது வரையுள்ள பெண்கள் இப்பயிற்சியில் சேரலாம்.

இதற்கு கல்வித் தகுதி தேவையில்லை. எழுதப் படிக்க தெரிந்திருந்தால் மட்டும் போதுமானது. ஜாக்கெட், சுடிதாா் மற்றும் பல்வேறு ஆடைகள் தைக்க இலவசமாக பயிற்சி அளிக்கப்படும்.

ADVERTISEMENT

இப்பயிற்சியில் சேர ஆதாா், பள்ளி அல்லது கல்லுாரி மாற்றுச் சான்று, ஜாதிச் சான்று, வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் பாஸ்போா்ட் அளவு புகைப்படும் ஆகியவற்றுடன் பல்லடம் காளிவேலம்பட்டி பிரிவில் உள்ள சிட்ரா விசைத்தறி பணி மையத்தை அணுகலாம்.

கூடுதல் விவரங்களுக்கு 04255 - 253153 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT