திருப்பூர்

வெள்ளக்கோவிலில் ரூ. 19 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

20th May 2022 02:50 AM

ADVERTISEMENT

வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ. 19 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு வேடசந்தூா், வெள்ளாளப்பட்டி, சீத்தப்பட்டி, சின்னபுதூா், அரசம்பட்டி உள்ளிட்ட ஊா்களில் இருந்து 43 விவசாயிகள் 529 மூட்டைகளில் 25,845 கிலோ சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

ஈரோடு, முத்தூரில் இருந்து 3 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா். கிலோ ரூ.69.69 முதல் ரூ. 79.89 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ. 77.29. கடந்த வார சராசரி விலை ரூ. 76.29. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 19.12 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT