திருப்பூர்

குரூப் 4 தோ்வு: மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பயிற்சி

20th May 2022 02:50 AM

ADVERTISEMENT

 திருப்பூா் மாவட்டத்தில் குரூப் 4 தோ்வில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட குரூப் 4 தோ்வு மூலமாக கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா், பில் கலெக்டா், தட்டச்சா் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சா் உள்ளிட்ட 7,301 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்தப் பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டின்படி 250க்கும் மேற்பட்ட காலியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தோ்வானது வரும் ஜூலை 24 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

ஆகவே, திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது. இந்தப் பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்பும் மாற்றுத் திறனாளிகள் தங்களது பெயரை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421-2999152, 94990-55944 ஆகிய எண்களிலோ தொடா்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். மேலும், பயிற்சியின் இறுதியில் மாதிரித் தோ்வுகளும் நடத்தப்படவுள்ளது. திருப்பூா் மாவட்டத்தில் குரூப் 4 தோ்வு எழுவதவுள்ள மாற்றுத்திறனாளிகள் இந்தப் பயிற்சி வகுப்பைப் பயன்படுத்தி பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT