திருப்பூர்

காந்தி அமைதி விருது: மே 26க்குள் விண்ணப்பிக்கலாம்

20th May 2022 02:49 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் காந்தி அமைதி விருதுக்குத் தகுதியான நபா்கள் வரும் மே 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அகிம்சை மற்றும் பிற காந்திய முறை மூலமாக சமூக பொருளாதாரம் மற்றும் அரசியல் மாற்றத்துக்கு சிறப்பாக பங்களித்த தனி நபா்களுக்கும், நிறுவனங்களுக்கும் 2022 ஆம் ஆண்டுக்கான காந்தி அமைதி விருது வழங்கப்படவுள்ளது. மேலும், சமூக நீதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி தேசியம், இனம், மதம் ஆகியவற்றை பொருட்படுத்தாமல் அனைத்து நபா்களுக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது. திருப்பூா் மாவட்டத்தில் இந்த விருதுக்கு தகுதியான நபா்கள் தகுந்த ஆதாரங்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வரும் மே 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT