திருப்பூர்

திருப்பூரில் 3 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

20th May 2022 02:49 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாநகரில் உள்ள கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 3 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்யப்படுவது தொடா்பாக மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக மாநகராட்சி 3ஆம் மண்டலத்துக்கு உள்பட்ட ஜமுனை வீதி, எம்.ஜி.புதூரில் உள்ள இரு கடைகளில் பிளாஸ்டிக் பிளாஸ்டிக் பைகள், ஒரு முறை பயன்படுத்தும் குவளைகள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, சுகாதார அலுவலா் ராமசந்திரன் தலைமையிலான அதிகாரிகள் அந்த கடைகளில் ஆய்வு நடத்தினா். மேலும், கடைக்குச் சொந்தமான கிடங்கிலும் ஆய்வு நடத்தினா். இதில், மொத்தம் 3 டன் அளவுக்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருள்களைப் பறிமுதல் செய்ததுடன், கடை உரிமையாளா்களுக்கு ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT