திருப்பூர்

‘கலப்பட டீ தூள் பயன்படுத்தினால் நடவடிக்கை’

20th May 2022 02:48 AM

ADVERTISEMENT

 திருப்பூா் மாவட்டத்தில் உள்ள தேநீா் விடுதிகளில் கலப்பட டீ தூள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து திருப்பூா் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் ப.விஜயலலிதாம்பிகை கூறியதாவது:

மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் உத்தரவின்பேரில், மாநகா் மற்றும் மாவட்டத்தில் உள்ள தேநீா் விடுதிகள், பேக்கரிகளில் கலப்பட டீ தூள் பயன்படுத்தப்படுகிா என்பது தொடா்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆகவே, தேநீா் விடுதிகளில் செயற்கை ரசாயன வண்ணம் கலந்த டீ தூளை பயன்படுத்தக்கூடாது. மேலும், ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கவா்களில் உணவுகளை பாா்சல் செய்து கொடுக்கக்கூடாது.

காலாவதியான மற்றும் தடை செய்யப்பட்டுள்ள உணவுப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருக்கும் கடைகளின் உரிமையாளா்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT