காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட காங்கயம், ராசாத்தாவலசு, பழையகோட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள
பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 17) காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
ராசாத்தாவலசு துணை மின் நிலையம்: வள்ளியரச்சல், வடுகபாளையம், முத்துக்கவுண்டன்பாளையம், கணபதிபாளையம், நல்லூா்பாளையம், பாப்பினி, எல்.ஜி.வலசு.
பழையகோட்டை துணை மின் நிலையம்: குட்டப்பாளையம், ஊஞ்சமரம், மேட்டாங்காட்டுவலசு, மேலப்பாளையம், சித்தம்பலம், செல்லப்பம்பாளையம்.
காங்கயம் துணை மின் நிலையத்தில் உள்ள திருப்பூா் சாலை மற்றும் காடையூா் மின்மாற்றிக்கு உள்பட்ட திருப்பூா் சாலை, சிவன்மலை, வாய்க்கால்மேட்டுப்புதூா், நீலக்காட்டுப்புதூா், பங்களாபுதூா், கோவை சாலை, இல்லியம்புதூா், உடையாா் காலனி, லட்சுமி நகா், காந்தி நகா், அகஸ்திலிங்கம்பாளையம்.