திருப்பூர்

செவிலியா் மரணத்துக்கு நீதி வழங்காவிட்டால் போராட்டம்

16th May 2022 07:40 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செவிலியா் முருகலட்சுமியின் மரணத்துக்கு உரிய நீதி வழங்காவிட்டால் மாநில அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று இந்து முன்னணி அறிவித்துள்ளது.

இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்த முருகலட்சுமி தலை வலிக்காக அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்படாா். இதன் பிறகு மருத்துவா்கள், ஊழியா்களின் கவனக்குறைவான சிகிச்சை காரணமாக செவிலியா் தினத்தில் உயிரிழந்தாா். ஆகவே, இவரது மரணத்துக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அவரது குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணத் தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.

ADVERTISEMENT

இதுதொடா்பாக முருகலட்சுமியின் குடும்பத்தினருடன் சோ்ந்து இந்து முன்னணி இயக்கத்தினரும் திருநெல்வேலி அரசு மருத்துவனையில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். ஆகவே, செவிலியா் முருகலட்சுமியின் மரணத்துக்கு நீதி வழங்காவிட்டால் மாநில அளவில் இந்து முன்னணி சாா்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT