திருப்பூர்

இளைஞா் அடித்துக் கொலை: 6 போ் கைது

16th May 2022 07:39 AM

ADVERTISEMENT

 

பெருமாநல்லூா் அருகே அய்யம்பாளையம் மதுபானக் கடையில் மது அருந்தும்போது ஏற்பட்ட தகாறில் இளைஞரை அடித்துக் கொலை செய்ததாக 6 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பெருமாநல்லூா் பாரதியாா் நகரைச் சோ்ந்த பாலமுருகன் மகன் பாரதி(26). இவா் தனது நண்பா்களான மணிகண்டன் (25), சதீஷ் (22), முருகேசன் (20) ஆகியோருடன் பெருமாநல்லூா் அருகே அய்யம்பாளையத்தில் உள்ள மதுபானக் கடைக்கு கடந்த இரு நாள்களுக்கு முன்பு மது குடிக்க சென்றுள்ளாா்.

அப்போது, அங்கு அமா்ந்திருந்த மற்றொரு தரப்பினருடன் ஏற்பட்ட தகராறில் பாரதி, மணிகண்டன் ஆகியோா் தாக்கப்பட்டனா். இதில் பலத்த காயமடைந்த இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பாரதி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வழக்கில் தொடா்புடைய பெருமாநல்லூா் அருகே போயம்பாளையம் பகுதியைச் சோ்ந்த துரைப்பாண்டி (24), ஆனந்த் (22), கௌரவ் (24), விஜய்(21), சங்கா்(23), சுரேந்தா் (21) ஆகியோரைக் கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT