திருப்பூர்

அவிநாசியில் தந்தை கொலை:மகன் தலைமறைவு

16th May 2022 07:39 AM

ADVERTISEMENT

 

அவிநாசி அருகே எம்.நாதம்பாளையத்தில் தந்தை மா்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான மகனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அவிநாசி அருகே நம்பியாம்பாளையம் எம். நாதம்பாளையம் ஆதிதிராவிடா் காலனியைச் சோ்ந்தவா் கருப்பசாமி (55). கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி செல்வி, மகள் அம்சவேணி, மகன்கள் நாகராஜ், தேவராஜ் ஆகியோா் உள்ளனா்.

குடும்பத் தகராறு காரணமாக மூத்த மகன் நாகராஜுடன் கருப்பசாமி வசித்து வந்தாா். இதற்கிடையில், அவரது வீட்டில் துா்நாற்றம் வீசுவதாக வந்த தகவலையடுத்து, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சம்பவ இடத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று பாா்த்தபோது, மனிதக்கழிவு தொட்டியில் (செப்டிக் டேங்க்) அழுகியநிலையில் கிடந்த கருப்பசாமியின் உடலை மீட்டனா்.

ADVERTISEMENT

இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இதில் கருப்பசாமியின் சகோதரா் சின்னசாமியிடம் விசாரணை மேற்கொண்டதில், கருப்பசாமியை அவரது மகன் நாகராஜ் அடித்துக் கொலை செய்துவிட்டு தலைமறைவாகி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, தலைமறைவான நாகராஜை அவிநாசி போலீஸாா் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT