திருப்பூா் மாவட்ட அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
திருப்பூா் மாவட்ட அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா் சங்கத்தின் 4ஆவது மாவட்ட மாநாடு காங்கயத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சங்கத்தின் திருப்பூா் மாவட்ட புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
இதில், மாவட்டத் தலைவராக டி.சித்ரா, மாவட்டச் செயலாளராக கே.சித்ரா, பொருளாளராக கே.பேபி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். மேலும், துணைத் தலைவா்களாக வெண்ணிலா, ரகமத் நிஷா, சிவகாமி, ராணி, சுகுமாரி, ச.அனிதா, துணைச் செயலாளா்களாக எல்லம்மாள், தனலட்சுமி, சித்ராதேவி, ராணி, மாலதி, ராமாத்தாள், பொன்னாத்தாள், மாநில செயற்குழு உறுப்பினராக ஏ.கஸ்தூரி, மாவட்ட செயற்குழு உறுப்பினராக லதா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.