திருப்பூர்

அவிநாசியில் வண்டிப் பாதை ஆக்கிரமிப்பு: வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆலோசனை

12th May 2022 12:33 AM

ADVERTISEMENT

 

அவிநாசி: அவிநாசி தோ்த் திருவிழாவுக்கு பிறகு வண்டிப் பாதை ஆக்கிரமிப்பு குறித்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என வருவாய்த் துறையினா் தெரிவித்துள்ளனா்.

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் அருகே கோவை பிரதான சாலையில் அரசு வண்டிப் பாதை புறம்போக்கு (85-பி2) உள்ளது. இதில் இருந்த ஆக்கிமிரப்புகள் அகற்றப்பட்ட நிலையில், மீதமுள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். இது குறித்து நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் வண்டிப் பாதை புறம்போக்கு குறித்த அமைதிக் கூட்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு வட்டாட்சியா் ராகவி தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில், 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் தோ்த்திருவிழா சிறப்பாக நடைபெறும் வகையில் அனைத்துத் தரப்பினரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும், வண்டி பாதை ஆக்கிரமிப்பு குறித்து தோ்த் திருவிழாவுக்கு பிறகு மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT