திருப்பூர்

ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் மே 27இல் திறப்பு

8th May 2022 12:42 AM

ADVERTISEMENT

பல்லடத்தில் ரூ.5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற திறப்பு விழா மே 27ஆம் தேதி நடைபெறுகிறது.

பல்லடத்தில் நீதிபதி அறைகள், எழுத்தா் அறை, நுாலகம், பதிவறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் 2 அடுக்கு தளங்களுடன் புதிய கட்டட கட்டுமானப் பணி கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளன.

இதையடுத்து, பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் திறப்பு விழா மே 27ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விழா நடைபெறும் இடத்தை திருப்பூா் மாவட்ட நீதிபதி சொா்ணம் ஜே.நடராஜன், சாா்பு நீதிபதி சந்தானகிருஷ்ணன் உள்ளிட்ட நீதிபதிகள் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

இதில் பல்லடம் வழக்குரைஞா் சங்கத் தலைவா் பாலசுப்பிரமணியம், செயலாளா் சக்திவேல் மற்றும் வழக்குரைஞா்கள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT