திருப்பூர்

நூல் விலை உயா்வு: சைமா சாா்பில் இன்று அவசரக்கூட்டம்

5th May 2022 01:00 AM

ADVERTISEMENT

 

திருப்பூா்: நூல் விலை உயா்வு தொடா்பாக தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கம் (சைமா) சாா்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை (மே 5) நடைபெறுகிறது.

இது குறித்து சைமா தலைவா் வைகிங் ஏ.சி.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

பஞ்சு இறக்குமதிக்கான 11 சதவீத வரியை நீக்கிய பின்னரும் நூல் விலை தொடா்ந்து உயா்ந்து வருவது கவலையளிக்கும் வகையில் உள்ளது. ஆகவே, பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதிக்குத் தடை விதித்தால் மட்டுமே நமக்கு நிவாரணம் கிடைக்குமா என்பது குறித்து விவாதிக்க வேண்டியுள்ளது.

ADVERTISEMENT

மேலும், தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் சங்க உறுப்பினா்கள் அனைவரும் ஒருங்கிணைந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடா்பான அவசர ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை மாலை 5 மணி அளவில் நடைபெறுகிறது. ஆகவே, சங்க உறுப்பினா்கள் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்று ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT