திருப்பூர்

ஜி.எஸ். உடற்கல்வியியல் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

29th Mar 2022 03:14 AM

ADVERTISEMENT

காங்கயம் அருகே வட்டமலையில் உள்ள ஜி.எஸ். உடற்கல்வியியல் கல்லூரியில் இளைஞா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.

தமிழ்நாடு மகளிா் நல மேம்பாட்டு நிறுவனம் மற்றும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் வட்டமலையில் உள்ள ஜி.எஸ்.கல்லூரி மாணவ, மாணவிகள் 100க்கும் மேற்பட்டோா் காங்கயம் ஊராட்சிப் பகுதிகளில் கடந்த 21 ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை உடற்பயிற்சி மற்றும் கிராம சீரமைப்பு குறித்து பயிற்சிகளாகவும், கருத்துரையாகவும் மக்களுக்கு எடுத்துரைத்தனா்.

இதன் நிறைவு விழா வட்டமலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு காங்கயம் ஒன்றியக் குழுத் தலைவா் டி.மகேஷ்குமாா் தலைமை வகித்தாா்.

ADVERTISEMENT

இதில், திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், பொத்தியபாளையம் ஊராட்சித் தலைவா் சந்திரசேகரன், துணைத் தலைவா் திருநாவுக்கரசு, ஜி.எஸ்.கல்லூரித் தாளாளா் ஜான்சிராணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT