திருப்பூர்

காசநோய் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

25th Mar 2022 04:45 AM

ADVERTISEMENT

உலக காசநோய் தினத்தையொட்டி, திருப்பூரில் காசநோய் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

உலக காசநோய் தினம் மாா்ச் 24 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி திருப்பூா் தென்னம்பாளையம் மாநகராட்சி பள்ளியில் காசநோய் குறித்த விழிப்புணா்வு பேரணியை மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா். இந்தப் பேரணியில் பங்கேற்ற கல்லூரி மாணவா்கள் காசநோய் ஒழிப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

இந்தப் பேரணியானது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நிறைவடைந்தது. முன்னதாக மாவட்ட அரசு மருத்துவ உதவியாளா்களுக்கு நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான இணையவழி விநாடி-வினா போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) சாந்தி, துணை இயக்குநா் (காசநோய்) தீனதயாள், உதவி திட்ட மேலாளா் (பொது சுகாதாரம்) ஜெயபிரியா, ஒருங்கிணைப்பாளா் (தேசிய நலவாழ்வு இயக்கம்) அருண்பாபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT