திருப்பூர்

கைத்தறி முத்திரை மற்றும் கைபேசி செயலி தொடா்பான விழிப்புணா்வு கருத்தரங்கு

25th Mar 2022 04:42 AM

ADVERTISEMENT

திருப்பூரில் கைத்தறி முத்திரைத் திட்டம், பிரத்யேக கைப்பேசி செயலி இணையதளம் தொடா்பான கிளஸ்டா் அளவிலான விழிப்புணா்வு கருத்தரங்கம் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கருத்தரங்கைத் தொடங்கிவைத்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் பேசியதாவது:

இந்திய அரசு கைத்தறி முத்திரைத் திட்டத்தினை 2006 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இத்திட்டம் ஜவுளித் துறையின் கைத்தறி அபிவிருத்தி ஆணையா் அலுவலகம் மூலமாக நிா்வகிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் நோக்கம் கைத்தறியின் தனித்துவத்தை பாதுகாப்பது மற்றும் கைத்தறியை பிரபலபடுத்துவதுமாகும். முத்திரையிடப்பட்ட கைத்தறித் துணிகளின் மீதான நம்பகத்தன்மை அதிகரிப்பதுடன் விற்பனை அதிகரிக்கிறது.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக தற்போது கைத்தறி முத்திரை செயலி (ட்ஹய்க் ப்ா்ா்ம் ம்ஹழ்ந் ம்ா்க்ஷண்ப்ங் ஹல்ல்) மற்றும் கைத்தறி முத்திரை இணையதளம் (ட்ஹய்க் ப்ா்ா்ம் ம்ஹழ்ந் ல்ா்ழ்ற்ஹப்/ஜ்ங்க்ஷள்ண்ற்ங்) ஆகியவை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

ADVERTISEMENT

இந்த செயலி மூலமாக நெசவாளா் சுலபமாக விண்ணப்பிப்பதுடன், தங்களுக்குத் தேவையான லேபிள்களை செயலி மூலம் பெற்றுக் கொள்ளலாம். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கைத்தறி நெசவாளா்கள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கைத்தறி உற்பத்தியாளா்கள் கைத்தறி முத்திரை திட்டத்தின் கீழ் பதிவு செய்து பயனடையலாம். அதேவேளையில்,பொதுமக்கள் கைத்தறித் துணிகளை வாங்கும்போது கைத்தறி முத்திரை லேபில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

இந்தக் கருத்தரங்கில்,துணை இயக்குநா் நெசவாளா் சேவை மையம் டி.காா்த்திகேயன், திருப்பூா் மாவட்ட கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் உதவி இயக்குநா் கே.வெற்றிவேல், கோ-ஆப்டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளா் (கோவை) எம்.வெற்றிவேல், கோவை தேசிய கைத்தறி வளா்ச்சிக் கழகத்தின் மேலாளா் பி.ரத்தினவேல், திருப்பூா் மண்டல அலுவலகத்தின் உதவி இயக்குநா் ஜெ.பரமேஸ்வரன் மற்றும் கைத்தறி நெசவாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT