திருப்பூர்

வெள்ளக்கோவிலில் ரூ. 28 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

25th Mar 2022 11:39 PM

ADVERTISEMENT

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 28 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு சரவணம்பட்டி, பூசாரிபட்டி, பெரியகோட்டை, 16 புதூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 40 விவசாயிகள் தங்களுடைய 871 மூட்டைகள் சூரியகாந்தி விதைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 42,948 கிலோவாகும்.

ஈரோடு, கொடுமுடி, முத்தூா், காங்கயத்தில் இருந்து 6 வணிகா்கள் வாங்குவதற்காக வந்திருந்தனா். விலை கிலோ ரூ.52.75 முதல் ரூ. 76.59 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ. 65.36. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 28 லட்சத்து 40 ஆயிரத்து 973 அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT