திருப்பூர்

மாநகரின் அனைத்து பகுதிகளிலும் வருமுன் காப்போம் திட்டத்தில் சிகிச்சை

25th Mar 2022 11:38 PM

ADVERTISEMENT

திருப்பூா் மாநகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என்று மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா் தெரிவித்தாா்.

திருப்பூா் மாநகராட்சி வாா்டு எண் 12, 32 ஆகிய இரு இடங்களில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த திட்டத்தைத் தொடக்கிவைத்த மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா் பேசியதாவது:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினால் தொடக்கவைக்கப்பட்ட கலைஞரின் வருமுன் காப்போம் ஏழை, எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மற்றும் சிறப்பு மருத்துவ சிகிச்சை எளிதில் கிடைக்கச் செய்தல், நோய்களுக்கான பரிசோதனை மற்றும் உடல்நலம் குறித்த ஆலோசனை வழங்குதல், அதிநவீன பரிசோதனை சாதனங்களால் நோய்களை கண்டறிதல், நோய் பாதிக்கப்பட்டவா்களுக்கு உடனடி சிகிச்சைஅளித்தல், சுகாதார விழிப்புணா்வு கல்வி வாயிலாக உடல்நல மேம்பாடு மற்றும் தனிநபா் ஆரோக்கியத்தை உருவாக்குவதுமாகும். திருப்பூா் மாநகரில் உள்ள அனைத்து பகுதி பொதுமக்களுக்கும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின்கீழ் சிறப்பான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என்றாா்.

இந்த நிகழ்ச்சிகளில், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம், மாநகா் நல அலுவலா் பிரதீப் வி.கிருஷ்ணகுமாா், மாமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT