திருப்பூர்

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

25th Mar 2022 11:39 PM

ADVERTISEMENT

தாராபுரத்தில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

தாராபுரம் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதியில் வசித்து வருபவா் எம்.தினேஷ்பாபு (29), கூலி தொழிலாளியான இவா் தனது வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை சாக்லேட் வாங்கிக் கொடுப்பதாக மாா்ச் 19 ஆம் தேதி அழைத்துள்ளாா்.

இதன் பிறகு சிறுமியை வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் தாராபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இந்தப் புகாரின்பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினா் தினேஷ்பாபுவை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT