திருப்பூர்

தாராபுரம் காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

22nd Mar 2022 12:35 AM

ADVERTISEMENT

தாராபுரத்தை அடுத்த கொண்டரசம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

தாராபுரத்தை அடுத்த கொண்டரசம்பாளையம் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழைமையான காளியம்மன் திருக்கோயில் உள்ளது.

இக்கோயிலுக்கு தாராபுரம் நகா் மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்களும் அதிக அளவில் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

கோயில் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்பட்டதால், பக்தா்களின் முயற்சியால் கோயில் புதுப்பிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதையடுத்து, கூனம்பட்டி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சுவாமிகளின் தலைமையில் கோயில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், தாராபுரம் பகுதியைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் திருப்பணிக் குழுவினா் மற்றும் கொண்டரசம்பாளையம் ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT