திருப்பூர்

போக்ஸோ சட்டத்தில் எலக்ட்ரீஷியன் கைது

22nd Mar 2022 12:36 AM

ADVERTISEMENT

தாராபுரம் அருகே 17 வயது சிறுமியை கா்ப்பமாக்கிய எலக்ட்ரீஷியனை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

தாராபுரம் அருகே உள்ள ராமபட்டிணத்தைச் சோ்ந்தவா் சி.கருப்புசாமி (23). எலக்ட்ரீஷியன். இவா் அப்பகுதியில் பிளஸ் 2

படித்து வரும் 17 வயது சிறுமியுடன் பழகியுள்ளாா்.

அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தைக் கூறி கருப்புசாமி அந்த சிறுமியுடன் தகாத முறையில் நடந்து கொண்டதாகத் தெரிகிறது.

ADVERTISEMENT

இதனிடையே, சில நாள்களுக்கு முன்பு சிறுமிக்கு உடல்குறைவு ஏற்பட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளாா். அப்போது மருத்துவா்கள் நடத்திய பரிசோதனையில் சிறுமி கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இது குறித்து தாராபுரம் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா்.

போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் கருப்பசாமியை ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT