திருப்பூர்

நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தவா்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்

19th Mar 2022 11:45 PM

ADVERTISEMENT

நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த இஸ்ஸாமியா்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் சாா்பில் மதுரையில் ஹிஜாப் தொடா்பான கண்டனப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தப் பேரணியில் பேசிய மாநில தணிக்கைக் குழு உறுப்பினா் ரஹமத்துல்லா உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்துப் பேசியுள்ளது கண்டிக்கத்தக்கதாகும்.

மேலும், அங்கு எழுப்பப்பட்ட கோஷங்கள் நீதிபதிகளையும், நீதித் துறையையும் மிரட்டும் வகையில் இருந்தது. ஆகவே, நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபா்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT