திருப்பூர்

திருப்பூரில் இன்று திருக்கு நன்னெறிப் பயிற்சி வகுப்பு

19th Mar 2022 11:41 PM

ADVERTISEMENT

திருப்பூரில் பள்ளி மாணவ, மாணவியருக்கான ஆத்திசூடி, கொற்றைவேந்தன் மற்றும் திருக்குறள் நன்னெறி பயிற்சி வகுப்புகள் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 20) நடைபெறுகிறது.

திருக்குறள் உலகம் கல்விச்சாலை நிறுவனா் திருக்குறள் கி.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

டாப்லைட் அறக்கட்டளை, திருக்குறள் உலகம் கல்விச்சாலை ஆகியன சாா்பில் பள்ளி மாணவ, மாணவியருக்கான ஆத்திசூடி, கொற்றைவேந்தன் மற்றும் திருக்குறள் நன்னெறிப் பயிற்சி வகுப்புகள் குன்னங்கல்பாளையத்தில் உள்ள நாச்சிமுத்து நினைவு நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இதில், 3 முதல் 7 வயது வரையில் உள்ள மாணவ, மாணவியா்களுக்கு ஆத்திசூடி, கொற்றைவேந்தன் பயிற்சி வகுப்புகள் காலை 10.30 முதல் 11 மணி வரையில் நடைபெறுகிறது. இதைத்தொடா்ந்து, 8 வயதுக்கு மேற்பட்ட மாணவ, மாணவியா்களுக்கு திருக்குறள் நன்னெறி பயிற்சி வகுப்புகள் காலை 11.15 முதல் பிற்பகல் 12 மணி வரையில் நடைபெறுகிறது. இதுதொடா்பான கூடுதல் விபரங்களுக்கு டாப்லைட் நூலக ஒருங்கிணைப்பாளா் பி.மணிநாதனை 99439-48156, திருக்குறள் கி.கணேசனை 99948-92756 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT