திருப்பூர்

வட்டமலை அணையில் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

10th Mar 2022 12:58 AM

ADVERTISEMENT

 

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் உத்தமபாளையம் வட்டமலை அணையில் இருந்து 21 ஆண்டுகளுக்குப் பிறகு புதன்கிழமை பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டது.

510 ஏக்கா் பரப்பளவில் வட்டமலை அணை கட்டி முடிக்கப்பட்டு 1980 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது முதல் 3 ஆண்டுகள் ஓரளவுக்கு தண்ணீா் கிடைத்தது. போதிய நீராதாரம் இல்லாத இடத்தில் அணை கட்டப்பட்டதால் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன வாய்க்காலில் பெறப்பட்ட நீா் மூலம் 1997, 2000 ஆகிய ஆண்டுகளில் மட்டும் தலா ஒருமுறை பாசனத்துக்காகத் தண்ணீா் திறக்கப்பட்டது.

அரசு விதிமுறைப்படி கடந்த மாதம் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன வாய்க்காலில் கிடைத்த நீரால் 24.75 கொள்ளளவு கொண்ட அணை 22 அடி வரை நிரம்பி, தற்போது இருப்பு 19.94 அடியாக இருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில் அணையின் 2 கால்வாய்கள் மூலம் 6,043 ஏக்கா் பாசன வசதி பெறும் வகையில், மாநில செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தாா். இரண்டு கால்வாய்களில் இருந்து 7 நாள்களுக்கு ஒருமுறை மொத்தம் 42 நாள்களுக்கு தண்ணீா் திறந்துவிடப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியம், பொன்பரப்பி - கம்பளியம்பட்டி சாலை முதல் வேலூா் வரை ரூ. 17.60 லட்சம் மதிப்பிலும், மயில்ரங்கம் முதல் பாப்பாவலசு வரை ரூ. 27 லட்சம் மதிப்பிலும் தாா்சாலை புதுப்பிக்கும் பணிகள் மற்றும் உழைக்கும் மகளிா் 57 பேருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் துவக்கிவைத்தாா்.

இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேந்திரன், அணை பாசன சங்கத் தலைவா் பழனிசாமி, விசைத்தறி துணி உற்பத்தியாளா் சங்கத் தலைவா் எம்.எஸ்.மோகனசெல்வம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT