திருப்பூர்

மகாராணி கல்லூரி மகளிா் தின விழா

10th Mar 2022 12:54 AM

ADVERTISEMENT

 

திருப்பூா்: தாராபுரத்தில் உள்ள மகாராணி கலை அறிவியல் கல்லூரியில் மகளிா் தின விழா கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு, கல்லூரி செயலாளா் என்.ஏ.எச்.சுலைமான் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் எஸ்.தமிழ்ச்செல்வி வரவேற்றாா்.

இதில், கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவா் ரவிகுமாா் தலைமையில் ‘பெண்கள் முன்னேற்றத்துக்கு பெரும் தடையாக இருப்பது சமூகமா? குடும்பமா? ’ என்ற தலைப்பில் கல்லூரிப் பேராசிரியா்கள் பங்கேற்ற பட்டிமன்றம் நடைபெற்றது.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து மாணவிகளின் கவிதை, பாடல், மாறுவேடம், நாடகம், நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. கணிதத் துறை தலைவா் என்.நித்யா நன்றி கூறினாா்.

இந்த நிகழ்ச்சியில், கல்லூரித் தலைவா் வி.கோவிந்தராஜ், துணைத் தலைவா் எம்.ஆா்.தமிழரசன், தாராபுரம் அரசு மருத்துவமனை உதவி அறுவை சிகிச்சை மருத்துவா் ஆஷிகா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT