திருப்பூர்

சாலைப் பணியில் ஈடுபட்டிருந்த வாகனங்களை சிறைபிடித்த விவசாயிகள்

10th Mar 2022 12:54 AM

ADVERTISEMENT

 

உடுமலை: உடுமலை அருகே நான்கு வழிச் சாலை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த வாகனங்களை விவசாயிகள் புதன்கிழமை சிறைபிடித்தனா்.

உடுமலை அருகே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக ஏராளமான கனரக வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பெரிய கோட்டை ஊராட்சிக்கு சொந்தமான ஒரு தரைமட்ட பாலத்தை விவசாயிகள் தங்களது விளைபொருள்களை கொண்டு செல்ல பயன்படுத்தி வந்த நிலையில் அந்த பாலத்தை நான்கு வழிச்சாலை ஒப்பந்ததாரா்கள் மூடி விட்டனா்.

இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதை அறிந்த அப்பகுதி விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோா் நான்கு வழிச்சாலை பணிகளை மேற்கொள்ளும் வாகனங்களை சிறைபிடித்து போராட்டம் நடத்தினா்.

ADVERTISEMENT

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விவசாயிகளை சமாதானப்படுத்தினா். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா். இதனால் சுமாா் ஒரு மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT