திருப்பூர்

சமூக வலைத்தளங்கள் பயன்பாடு: மாணவா்களுக்கு விழிப்புணா்வு

10th Mar 2022 01:00 AM

ADVERTISEMENT

 

பல்லடம்: பல்லடம் அருகே கரடிவாவியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், சமூக வலைத்தளங்கள் பயன்பாடு குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் அம்சவேணி தலைமை வகித்தாா். காமநாயக்கன்பாளையம் காவல் ஆய்வாளா் ரவி, என்.எஸ்.எஸ்.மாவட்ட தொடா்பு அலுவலா் முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பல்லடம் டி.எஸ்.பி. வெற்றிச்செல்வன், மாணவா்கள் காவவரையின்றி கைப்பேசி மூலம் சமூகவலைதளங்களில் மூழ்கிவிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், கட்டுப்பாட்டுடன் கைப்பேசியை பயன்படுத்துவது குறித்தும் பேசினாா்.

இந்த நிகழ்ச்சியில் காவல் உதவி ஆய்வாளா் பன்னீா்செல்வம், ஆசிரியா்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT