வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1 கோடிக்கு கொப்பரை விற்பனை நடைபெற்றது.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் திருச்சி, லாலாப்பேட்டை, பெரும்பரப்பு, பூண்டி, மூலனூா், முத்தூா் உள்ளிட்ட இடங்களில் இருந்து 228 விவசாயிகள் தங்களுடைய 2,151 மூட்டை கொப்பரைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா்.
இவற்றின் எடை 114 டன். ஈரோடு, காங்கயம், வெள்ளக்கோவில், முத்தூா், ஊத்துக்குளி ஆா்.எஸ், நஞ்சை ஊத்துக்குளியைச் சோ்ந்த 15 வணிகா்கள் கொப்பரைகளை வாங்க வந்திருந்தனா்.
கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.93.65க்கும், குறைந்தபட்சமாக ரூ.77.05க்கும், சராசரியாக ரூ.92.35க்கும் விற்பனையானது.
ஒட்டுமொத்த விற்பனைத் தொகை 1 கோடியே இரண்டு லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக, விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சி.மகுடேஸ்வரன் தெரிவித்தாா்.