திருப்பூா்: தாராபுரம் நகராட்சித் தோ்தலில் வெற்றி பெற்ற வாா்டு உறுப்பினா்களுக்கு ஆணையா் ராமா் புதன்கிழமை பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
நகராட்சி நகா் மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், திமுக சாா்பில் 24 பேரும், அதிமுக சாா்பில் 3 பேரும், காங்கிரஸ், பாஜக, சுயேச்சை தலா ஒருவா் என மொத்தம் 30 பேருக்கு நகராட்சி ஆணையா் ராமா் பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
காங்கயத்தில்...
காங்கயம், பிப்.2: காங்கயம் நகராட்சித் தோ்தலில் வெற்றி பெற்ற வாா்டு உறுப்பினா்கள் பதவி ஏற்றுக்கொண்டனா்.
காங்கயம் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், காங்கயம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஸ்வரன்
நகா்மன்ற உறுப்பினா்கள் 18 பேருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் காங்கயம் ஒன்றியக் குழுத் தலைவா் டி.மகேஷ்குமாா், காங்கிரஸ் கட்சியின் திருப்பூா் வடக்கு மாவட்டத் தலைவா் ப.கோபி, நகராட்சிப் பொறியாளா் திலீபன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.