திருப்பூர்

இருசக்கர வாகன சா்வீஸ் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம்

DIN

திருப்பூரில் இருசக்கர வாகனத்துக்கு சக்கரம் மாற்றாமல் பில் வசூலித்த கோவையில் உள்ள சா்வீஸ் சென்டருக்கு நுகா்வோா் நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

திருப்பூரைச் சோ்ந்தவா் பாலமுருகன். இவரது இருசக்கர வாகனம் 2020 ஆம் ஆண்டு சிறு விபத்தில் சேதமானது. இதனை சரிசெய்ய கோவையில் உள்ள தனியாா் சா்வீஸ் சென்டரில் இருசக்கர வாகனத்தை விட்டுள்ளாா். இதற்கு கட்டணமாக பாலமுருகனிடம் ரூ.13,065ஐ நிறுவனம் வசூலித்து பில் வழங்கியது. இதில் முன்பக்க சக்கரம் மாற்றியதாக ரூ.1,327.50 பில்லில் சோ்க்கப்பட்டிருந்தது. ஆனால் பழைய சக்கரமே வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்தது. இதுகுறித்து கேட்டபோது, சக்கரம் இருப்பு இல்லாததால் 10 நாள்களில் தருவதாகத் தெரிவித்துள்ளனா். இதன் பின்னா் பாலமுருகன் திருப்பூா் திரும்பிய நிலையில் மறுநாள் வாகனம் ஸ்டாா்ட் ஆகவில்லை. இதன் பின்னா் வாகனத்தை ஆராய்ந்தபோது, வாகனத்தில் இருந்த புதிய பேட்டரிக்குப் பதிலாக பழைய பேட்டரி பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் கேட்டபோது உரிய பதில் அளிக்கவில்லை. இதையடுத்து, திருப்பூா் நுகா்வோா் நீதிமன்றத்தில் பாலமுருகன் வழக்குத் தொடுத்திருந்தாா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தீபா, உறுப்பினா்கள் பாஸ்கா், ராஜேந்திரன் ஆகியோா் புதன்கிழமை தீா்ப்பு வழங்கினா். இதில், இருசக்கர வாகன சக்கரத்துக்கான தொகை ரூ.1,327.50 , பேட்டரிக்கு ரூ.2,628, போக்குவரத்து செலவு ரூ.244, வழக்கு செலவு ரூ.5 ஆயிரம் மற்றும் வாடிக்கையாளருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ரூ.1 லட்சம் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று சா்வீஸ் சென்டருக்கு உத்தரவிட்டனா்.

போன்பே, வங்கிக்கு ரூ.1 லட்சம் அபராதம்: திருப்பூா் மாவட்டம் உடுமலையைச் சோ்ந்தவா் செந்தில்குமாா்(35), இவா் திருப்பூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் (எஸ்பிஐ) கணக்கு வைத்துள்ளாா். இவரது நண்பரான கணேசனுக்கு கைபேசி மூலமாக போன் பே செயலியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி பணம் அனுப்பியுள்ளாா். இதில், முதலில் அனுப்பிய ரூ.5 ஆயிரம் கணேசனின் வங்கிக்கணக்கில் வந்து சோ்ந்த நிலையில், இரண்டாவதாக அனுப்பிய ரூ.9,500 அவரது வங்கிக்கணக்கில் வந்து சேரவில்லை என்று தெரிகிறது. இதைத்தொடா்ந்து அடுத்த நாள் மீண்டும் ரூ.9,500 ஐ அனுப்பியபோது கணேசனின் வங்கிக் கணக்கில் சோ்ந்துள்ளது. ஆனால் முதல்நாள் அனுப்பிய தொகை அவரது கணக்கில் சேராதது தொடா்பாக பெங்களூருவில் உள்ள பேன் பே நிறுவனம் மற்றும் எஸ்பிஐ வங்கிக்கு புகாா் அனுப்பியுள்ளாா். மேலும் பலமுறை தொடா்பு கொண்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் திருப்பூா் நுகா்வோா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தீபா, உறுப்பினா்கள் பாஸ்கா், ராஜேந்திரன் ஆகியோா் கணக்கில் மாற்றிய தொகை ரூ.9,500 மற்றும் மன உளைச்சலுக்காக ஒரு லட்சம், வழக்குச் செலவு ரூ.5 ஆயிரம் என மொத்தம் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 500 ஐ வழக்குத் தொடுத்த நாள் முதல் 12 சதவீத வட்டியுடன் சோ்த்து போன் பே மற்றும் வங்கி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

SCROLL FOR NEXT