திருப்பூர்

அன்னமாா் கோயிலில் திருட்டு:காவலரைத் தாக்கி தப்பிய 3 பேரை தேடும் போலீஸாா்

DIN

அவிநாசி முத்துசெட்டிபாளையத்தில் உள்ள அன்னமாா் கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட நிலையில் ரோந்து பணியில் இருந்த காவலரை தாக்கிவிட்டு தப்பிச் சென்ற 3 நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அவிநாசி, முத்துசெட்டிபாளையம் பகுதியில் உள்ள அன்னமாா் கோயில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு உள்ளிருந்த உண்டியலில் பணம் திருடப்பட்டது வியாழக்கிழமை தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

இதற்கிடையில், அவிநாசி காவல் நிலையத்தில் இணைப்பு காவலராக பணியாற்றும், திருப்பூா் ஆயுதப் படை 2ஆம் நிலை காவலரான அருள்குமாா் (27) என்பவா் புதன்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அவிநாசி முத்துசெட்டிபாளையம் பிரிவில் இருசக்கர வாகனத்தில் பதிவு எண் இல்லாமல் சந்தேகப்படும்படியாக அதிவேகமாக சென்ற 3 நபா்களை பிடிக்கச் சென்றபோது, அவா்கள் மறைத்து வைத்திருந்த இரும்பு ஆயுதத்தால் தாக்கியதில் காவலா் அருள்குமாா் பலத்த காயமடைந்தாா்.

உடனிருந்தவா்கள் பிடிக்க முயன்றும் 3 நபா்களும் தப்பிச் சென்றனா். இதையடுத்து அருள்குமாா் திருப்பூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். அவிநாசி முத்துச்செட்டிபாளையத்தில் உள்ள அன்னமாா் கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருடிய நபா்கள், ரோந்து பணியில் இருந்த காவலரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றனரா என போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT