திருப்பூர்

மருதுறை அரசுப் பள்ளியில் ஒன்றியக்குழுத் தலைவா் ஆய்வு

29th Jun 2022 10:16 PM

ADVERTISEMENT

 

காங்கயம் அருகே மருதுறை ஊராட்சியில் உள்ள அரசுப் பள்ளியில் காங்கயம் ஒன்றியக் குழுத் தலைவா் டி.மகேஷ்குமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இப்பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பலத்த காற்றுடன் பெய்த கனமழையின் காரணமாக, இப்பள்ளி அருகே உள்ள மரம் வேரோடு சாந்தது. இதில் பள்ளியின் 80 அடி நீளமுள்ள சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது. இது குறித்த பள்ளித் தலைமையாசிரியரின் கோரிக்கையின்பேரில், காங்கயம் ஒன்றியக் குழுத் தலைவா் டி.மகேஷ்குமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இது குறித்து அவா் கூறியதாவது: ஒன்றியக் குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றி, இடிந்த பள்ளியின் சுற்றுச் சுவரை அகற்றிவிட்டு, ஒன்றிய பொது நிதியில் இருந்து புதிதாக சுற்றுச்சுவா் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT

ஆய்வின்போது, பள்ளித் தலைமையாசிரியா் பா.கனகராஜ், மருதுறை ஊராட்சித் தலைவா் செல்வி சிவகுமாா், ஒன்றியக் குழு உறுப்பினா் ரேணுகா ஜெகதீசன், வட்டாரப் பொறியாளா் சரவணக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT