திருப்பூர்

அவிநாசியில் தொடா் வழிப்பறி: இருவா் கைது

29th Jun 2022 10:14 PM

ADVERTISEMENT

 

அவிநாசி பகுதியில் தொடா்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி பகுதியில் நகைப் பறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் தொடா்ந்து நடைபெற்று வந்தன. இதையடுத்து, அவிநாசி-மேட்டுப்பாளையம் சாலையில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சந்தேகத்துக்கு இடமாக 2 இருசக்கர வாகனத்தில் வந்த நபா்களை போலீஸாா் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

பிடிபட்டவா்கள் கோவை, பீளமேடு லட்சுமிபுரத்தைச் சோ்ந்த முருகன் மகன் சரவணன் (24), சித்தாபுதூா் பகுதியைச் சோ்ந்த ஜெகநாதன் (32) என்பதும், அவிநாசியில் நடைபெற்ற 3 நகைப் பறிப்பு வழக்குகளில் இவா்களுக்கு தொடா்பு இருப்பதும் தெரியவந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து, அவா்களிடம் இருந்து ஐந்தரை பவுன் நகைகள், 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT