திருப்பூர்

திருப்பூரில் நிதி நிறுவன அதிபா் வெட்டிக் கொலை

29th Jun 2022 10:18 PM

ADVERTISEMENT

 

திருப்பூா், முதலிபாளையம் சிட்கோ பகுதியில் வீடு புகுந்த மா்ம நபா்கள் நிதி நிறுவன அதிபரை புதன்கிழமை வெட்டிக் கொலை செய்தனா்.

திருப்பூா் முதலிபாளையம் சிட்கோ பவா்காா்டன் சிட்டி பகுதியில் வசித்து வந்தவா் பாலசுப்பிரமணியன் (31). இவா் ரியல் எஸ்டேட் மற்றும் சொந்தமாக நிதி நிறுவனம் நடத்தி வந்தாா். திருமணமான இவா் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய், தந்தையருடன் தனியாக வசித்து வந்தாா்.

இந்த நிலையில், பாலசுப்பிரமணியனின் பெற்றோா் பழனி அருகே உள்ள கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை சென்றுள்ளனா். பின்னா் புதன்கிழமை காலை இருவரும் வீடு திரும்பியுள்ளனா். அப்போது, வீட்டின் கதவு திறந்து கிடந்ததுடன், ரத்தக்கறை இருப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்துள்ளனா்.

ADVERTISEMENT

மேலும் கத்திக்குத்து காயங்களுடன் பாலசுப்பிரமணியனின் சடலம் கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் ஊத்துக்குளி காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்தனா். பின்னா் பாலசுப்பிரமணியனின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.

இதில் தொழில் போட்டி காரணமாக யாரேனும் அவரை கொலை செய்தனரா அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என்பது குறித்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT