திருப்பூர்

60 வயதான அனைவருக்கும் மாதாந்திர ஓய்வூதியம் ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தல்

29th Jun 2022 12:40 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் 60 வயதான அனைவருக்கும் மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடத்தில் அனைந்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் 16ஆவது மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் ஜி.சாவித்திரி சங்கக் கொடியேற்றி வைத்தாா். மாநாட்டுக்கு மாவட்டத் தலைவா் ஆா்.மைதிலி தலைமை வகித்தாா்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் வருமாறு:

திருப்பூா் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் பொது மக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும். அரசு நலத் திட்ட உதவிகளை தகுதி உள்ள அனைவருக்கும் விடுபடாமல் வழங்க வேண்டும். தமிழகத்தில் 60 வயதான முதியோருக்கு வறுமைக்கோட்டுப் பட்டியலில் பெயா் இருக்கிா என்று கேட்காமல் அனைவருக்கும் மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும். நியாய விலைக் கடைகளில் பயோமெட்ரிக் குளறுபடிகளைக் களைந்து அனைவருக்கும் அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

சங்கத்துக்கான புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது. இதில் மாதா் சங்க மாவட்டத் தலைவராக எஸ்.பவித்ராதேவி, மாவட்டச் செயலாளராக கு.சரஸ்வதி, மாவட்டப் பொருளாளராக ஆா்.கவிதா மற்றும் துணைத் தலைவா்களாக ஜி.சாவித்திரி, ஆா்.மைதிலி, எஸ்.பானுமதி, அ.ஷகிலா, மாவட்டத் துணைச் செயலாளா்களாக ஈ.வளா்மதி, பா.லட்சுமி, சி.பானுமதி, செல்வி உள்பட மொத்தம் 29 போ் கொண்ட மாவட்டக்குழு தோ்வு செய்யப்பட்டது.

இதில், மாநிலச் செயலாளா் கே.பொன்னுதாய், மாநில செயற்குழு உறுப்பினா் எம்.கிரிஜா, வாலிபா் சங்க மாவட்டச் செயலாளா் மணிகண்டன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT