திருப்பூர்

பழைய பொருள்கள் விற்பனைக் கடையில் பெட்ரோல் குண்டு வீசியவா் கைது

29th Jun 2022 12:42 AM

ADVERTISEMENT

திருப்பூரில் பழைய பொருள்கள் விற்பனை செய்யும் கடையில் பெட்ரோல் குண்டு வீசியவரை காவல் துறையினா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், திருமுருகன்பூண்டியைச் சோ்ந்தவா் கே.நாகராஜ் (41), இவா் பனியன் நிறுவனங்களுக்குத் தேவையான பொருள்கள், அலமாரி, நாற்காலி உள்ளிட்ட பழைய பொருள்களை வாங்கி விற்பனை செய்து வருகிறாா். மேலும் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறாா். இந்த நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சுபாஷ் சந்திர போஸ் (27) என்பவா், நாகராஜை பணம் கேட்டு மிரட்டியுள்ளாா். ஆனால் பணம் தரமுடியாது என்று நாகராஜ் தெரிவித்தால் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் நாகராஜ் வழக்கம்போல கடை வியாபாரம் முடிந்து ஞாயிற்றுக்கிழமை இரவு கடையை உள்புறமாகப் தாளிட்டு உறங்கியுள்ளாா்.

நாகராஜ் திங்கள்கிழமை காலையில் எழுந்து பாா்த்தபோது கடையின் மீது பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் கடையின் இரும்பு கேட் சேதமடைந்தது. இதுகுறித்து திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் நாகராஜ் புகாா் அளித்துள்ளாா். இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய காவல் துறையினா் தலைமறைவாக இருந்த சுபாஷ் சந்திரபோஸை திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT