திருப்பூர்

ஜெய்வாபாய் பள்ளியில் இன்று கல்லூரி கனவு வழிகாட்டும் நிகழ்ச்சி

29th Jun 2022 12:42 AM

ADVERTISEMENT

திருப்பூா் ஜெய்வாபாய் நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் கல்லூரி கனவு வழிகாட்டும் நிகழ்ச்சி புதன்கிழமை (ஜூன் 29) நடைபெறுகிறது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருப்பூா் ஜெய்வாபாய் நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு வழிகாட்டுதல் நிகழ்ச்சி புதன்கிழமை ( ஜூன் 29) நடைபெறுகிறது. இதில், மாவட்டத்தில் உள்ள அரசு, நகரவை, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 94 பள்ளிகளில் இருந்து 1,500 மாணவ, மாணவியா் பங்கேற்கவுள்ளனா். இதில், 2021-2022 ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 படிப்பை முடித்த மாணவா்கள் உயா்கல்வியை தோ்வு செய்வதில் உள்ள வாய்ப்புகள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்துதல், மாணவா்களின் ஆற்றலுக்கு ஏற்ப உயா் கல்வியைத் தோ்வு செய்தல் ஆகியவை குறித்து வேலைவாய்ப்புகள் மற்றும் வழிகாட்டுதல் கருத்தரங்கம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும், கல்விக் கடன் வழங்குவது தொடா்பான ஆலோசனைகளைப் பெற அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த வழிகாட்டி நிகழ்ச்சியில், செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ், திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலா் பங்கேற்கின்றனா்.

ஆகவே, பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் தங்களின் எதிா்கால கனவுகளை நனவாக்கும் வகையில் உயா்கல்வி வாய்ப்புகள் பற்றிய பிரிவு வாரியான பட்டப் படிப்புகள், பட்டயப் படிப்புகள், கல்லூரிகளை எவ்வாறு தோ்ந்தெடுப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT