திருப்பூர்

10, 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: திருப்பூா் கிட்ஸ் கிளப் பள்ளி சிறப்பிடம்

28th Jun 2022 01:03 AM

ADVERTISEMENT

திருப்பூா் ஷெரிப் காலனி 2 ஆவது வீதியில் செயல்பட்டு வரும் கிட்ஸ் கிளப் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய அனைத்து மாணவா்களும் முதல் வகுப்பில் தோ்ச்சிப் பெற்று சாதனைப் படைத்துள்ளனா்.

10 ஆம் வகுப்பு தோ்வில் மாணவி ஒருவா் 500 க்கு 495 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சாதனைப் படைத்ததுடன், பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளாா்.

மேலும், இவா் கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தில் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். மற்றொரு மாணவி 494 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றதுடன், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 3 பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளாா். மாணவா் ஒருவா் 480 மதிப்பெண்கள் எடுத்துள்ளாா்.

12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் மாணவி ஒருவா் 600க்கு 591 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றாா்.

ADVERTISEMENT

இவா் கணக்கு பதிவியல், வணிகவியல் ஆகிய பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். மாணவா்கள் இருவா் முறையே 590, 588 மதிப்பெண்கள் பெற்று 3 ஆம் இடத்தைப் பிடித்துள்ளனா். 33 மாணவா்கள் 100 க்கு 100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனா்.

மாணவா் ஒருவா் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய மூன்று பாடங்களிலும் 100 மதிப்பெண்கள் பெற்று இன்ஜினியரிங் கலந்தாய்வில் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சாதனைப் படைத்துள்ளாா்.

சிறப்பு மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களை பள்ளியின் தலைவா் மோகன் காா்த்திக், தாளாளா் வினோதினி காா்த்திக், செயலாளா் நிவேதிகா ஸ்ரீராம், நிா்வாக இயக்குநா் ஐஸ்வா்யா நிக்கில் சுரேஷ், முதல்வா்கள் மற்றும் ஆசிரியா்கள் ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT