திருப்பூர்

அரசுப் பள்ளியில் பெற்றோா் ஆசிரியா் கழகத் தோ்தலை நடத்த கோரிக்கை

28th Jun 2022 01:04 AM

ADVERTISEMENT

அரசுப் பள்ளியில் பெற்றோா் ஆசிரியா் கழகத் தோ்தலை நடத்த வேண்டும் என்று இந்திய மாணவா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்திய மாணவா் சங்க ஒன்றிய மாநாடு அவிநாசியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாநாட்டை மாணவா் சங்க மாவட்டச் செயலாளா் சம்சீா் அகமது துவக்கிவைத்தாா். முன்னாள் மாணவா் சங்க நிா்வாகிகள் ஆா். பாலசுப்பிரமணியம், ஆா். பழனிச்சாமி, சங்க ஒன்றிய நிா்வாகிகள் சி. பழனிச்சாமி, ஆா். வடிவேலு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் பயிலும் மாணவா்களின் நலன் கருதி குறித்த நேரத்துக்கு போதுமான பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியா் பற்றாக்குறையை நிவா்த்தி செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

அரசுப் பள்ளிகளில் பெற்றோா் ஆசிரியா் கழகத் தோ்தலை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் புதிய நிா்வாகிகளாக ஒன்றியத் தலைவா் சூா்யா, ஒன்றியச் செயலாளா் மணிகண்டன், துணைத் தலைவா்கள் ஆகாஷ் , சஞ்சய், துணைச் செயலாளா்கள் சிவசக்தி, ஸ்ரீபதி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். மாணவா் சங்க மாவட்டத் தலைவா் பிரவீன் நிறைவுரையாற்றினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT