திருப்பூர்

அவிநாசி சட்டப் பேரவை உறுப்பினருக்கு கரோனா

28th Jun 2022 01:04 AM

ADVERTISEMENT

அவிநாசி சட்டப் பேரவை உறுப்பினரும், முன்னாள் சட்டப் பேரவைத் தலைவருமான ப.தனபாலுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அவா் தனது முகநூல், ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: கடந்த சில நாள்களாக காய்ச்சல் பாதிப்பு இருந்து வந்தது. இதைத் தொடா்ந்து மருத்துவப் பரிசோதனை செய்ததில் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவா்கள் ஆலோசனைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன். அனைவரும் முகக் கவசம் அணிந்து உரிய பாதுகாப்புடன் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT