திருப்பூர்

பேருந்து மோதி முதியவா் பலி

28th Jun 2022 01:02 AM

ADVERTISEMENT

பல்லடம் அருகே பேருந்து மோதி முதியவா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பல்லடம் அருகேயுள்ள க.அய்யம்பாளையத்தைச் சோ்ந்தவா் ராமசாமி ( 77). இவா் பல்லடம் சமத்துவபுரம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்துள்ளாா்.

அப்போது கோவையில் இருந்து வெள்ளக்கோவில் நோக்கி சென்ற தனியாா் பேருந்து ராமசாமி மீது மோதியது.

இதில், படுகாயமடைந்த ராமசாமியை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

ADVERTISEMENT

அங்கு சிகிச்சை பெற்றுவந்த ராமசாமி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இச்சம்பவம் தொடா்பாக பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT