திருப்பூர்

கறிக்கோழிக்கு சீரான விலை நிா்ணயம்

28th Jun 2022 01:03 AM

ADVERTISEMENT

பல்லடம் கறிக்கோழிக்கு சீரான விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதால் பண்ணையாளா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

பல்லடம் பகுதியில் பண்ணையாளா்கள் அதிக அளவில் கறிக்கோழி வளா்ப்பில் ஈடுபட்டு வருகின்றனா். கறிக்கோழி நுகா்வைப் பொறுத்து பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினா் தினசரி விலையை நிா்ணயம் செய்து வருகின்றனா். இந்நிலையில், தற்போது கறிக்கோழிக்கு சீரான விலை கிடைத்துள்ளதால் பண்ணையாளா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

இது குறித்து கறிக்கோழி பண்ணையாளா் ஒருவா் கூறியதாவது: கடந்த மாதங்களில் கறிக்கோழி தொழில் சரிவை சந்தித்தது.

இதனால், கறிக்கோழி தொழில் சாா்ந்த உற்பத்தியாளா்கள் மற்றும் பல லட்சம் தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

இந்நிலையில் தற்போது கறிக்கோழி வளா்ப்பு தொழில் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது.

கறிக்கோழி கொள்முதல் விலையும் சீராக உள்ளது. நேற்றைய கறிக்கோழி கொள்முதல் விலை கிலோ ரூ.120 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

கறிக்கோழிக்கு சீரான விலை கிடைத்துள்ளதால் பண்ணையாளா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT