திருப்பூர்

ரூ.7.87 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

28th Jun 2022 01:01 AM

ADVERTISEMENT

காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.7.87 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு காங்கயம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 19 விவசாயிகள் 190 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 9,611 கிலோ.

காங்கயம், வெள்ளக்கோவில், முத்தூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 6 வியாபாரிகள் கொப்பரைகளை வாங்க வந்திருந்தனா்.

கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.86-க்கும், குறைந்தபட்சமாக ரூ.71-க்கும், சராசரியாக ரூ.84- க்கும் ஏலம்போனது.

ADVERTISEMENT

ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.7.87 லட்சம்.

ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் ஆா்.மாரியப்பன் செய்திருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT